
ஷார்ஜாவில் நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மளமளவென விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
இளம் வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜெகதீசனுக்கு இந்த ஆட்டத்தில் ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்பட்டது.
இருவருமே ரன் எதுவும் சேர்க்காமல் வெளியேறினார்.
இந்நிலையில் இளம் வீரர்களின் திறன் குறித்து அன்றே சொல்லியிருந்தார் தோனி என ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.
ராஜஸ்தான் அணியுடனான தோல்விக்கு பிறகு இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என தோனி சொல்லியுருந்தார்.
அதை உறுதி செய்யும் வகையில் இருவருமே கிடைத்த வாய்ப்பை வீணடித்துள்ளனர்.