[X] Close

எதிரெதிர் டீமில் கோலி - கெய்ல்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

virat-kohli-may-open-todays-match

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. இதில் ஐபிஎல் போட்டியில் ஒரே அணியில் இருந்த கோலியும் கிறிஸ் கெய்லும் மோதுவதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக இந்த அணிகள் மோதும் 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது. கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் திரும்பியுள்ளதால் அந்த அணி, வலுவான நிலையில் இருக்கிறது. 15 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ள கெய்ல், பொல்லார்ட், சாமுவேல்ஸ், சுனில் நரேன் ஆகியோரும் இந்திய அணிக்கு சவாலாக இருப்பார்கள்.


Advertisement

இந்திய அணியில் ரிஷாப் பான்ட் சேர்க்கப்படலாம். விராத் கோலி இன்றைய போட்டியில் தொடக்க வீரராக களமிறங்குவார் எனத் தெரிகிறது. ஐபிஎல் போட்டியில் கோலியும் கெய்லும் பெங்களூர் அணியில் இருந்தவர்கள் என்பதால் இந்த போட்டியில் இருவரையும் எதிரெதிர் களத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இரு அணிகளும் பலம் வாய்ந்தவையாக இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இரண்டு அணிகளும் இதுவரை 20 ஓவர் போட்டிகளில் ஏழு முறை மோதியுள்ளன. இதில் 2ல் இந்தியாவும், 4ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை. போட்டி, இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்கிறது.


Advertisement

Advertisement
[X] Close