Published : 23,Oct 2020 12:52 PM

புறநகர் ரயில் சேவை - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை.!

chief-minister-edappadi-palanisamy-write-letter-to-federal-minister-pyush-goyal-about-train-facility

சென்னையில் புறநகர் ரயில் சேவையை தொடங்குமாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்கெனவே தடைபட்டிருந்த பொதுபோக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேருந்து, மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவத்து உள்ளிட்ட பல்வேறு தடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

image

ஆனால் புறநகர் ரயில்களுக்கு மட்டும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. பொருளாதார ரீதியாக மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. பொதுமக்களுக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் புறநகர் ரயில் சேவை உதவும். எனவே சென்னையில் புறநகர் ரயில் சேவையை தொடங்க வேண்டும். புறநகர் ரயில் சேவையை தொடங்க செப்டம்பர் 2ஆம் தேதி தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது” எனக்  குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்