அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார். அப்படம் அவ்வருடத்தின் சிறந்தப் படமாக கொண்டாடப்பட்டு விருதுகளைக் குவித்தது. அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தையும் தயாரித்தார். அப்படமும் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைக் குவித்தது.
Dreams as hope or fear! The intriguing #KuthiraivaalTeaser is Out Now!
➡https://t.co/Dfv7NqsvJn
@officialneelam @Vigsun @KalaiActor @AnjaliPOfficial @manojjahson @shyamoriginal @karthikmuthu14 @naanVPR @anthoruban @YaazhiFilms_ @kuthiraivaal @thinkmusicindia @pro_guna pic.twitter.com/zX18x0OcIl— pa.ranjith (@beemji) October 22, 2020Advertisement
இந்நிலையில், கடந்த ஆண்டு தனது நீலம் புரடொக்ஷன் மூலம், மேலும் 5 படங்களை தயாரிப்பதாக அறிவித்தார். அதில், ஒன்றுதான் குதிரைவால். இப்படத்தை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷாம் சுந்தர் இப்படத்தை இயக்க கலையரசனுக்கு ஜோடியாக அஞ்சலி பாட்டில் நடித்துள்ளார்.
டீசரில், மலைப்பகுதியில் குதிரை ஒன்று வால் இல்லாமல் நிற்கிறது. கலையரசன் கனவில் தூங்கிக்கொண்டிருக்க, இன்று அதிகாலை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவரது இல்லமான ராமாவரம் தோட்டத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி வாசிப்பு பெண் குரல் கேட்கிறது. அதோடு எம்.ஜி.ஆர் குரலில் கலையரசன் ’த பொண்ணு உன்னைத்தான். குதிரை பார்க்க இவ்ளோ அழகா இருக்கே? ஆனா அதுக்கு வால் இல்லையே? எங்கம்மா போச்சி?’ என்று கேட்டுக்கொண்டே துங்கி எழுகிறார். அவரது பின்பிறத்தில் குதிரையின் வால் இருக்கிறது. மிகவும் வித்தியாமாக உள்ள இந்த டீசர் வரவேற்பைப் பெற்றுக்கொண்டு வருகிறது.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai