[X] Close

விஜயுடன் டான்ஸ்: காயமடைந்தாரா வடிவேலு?

Vadivelu-injured-in-Mercel-Shooting-

மெர்சல் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் வடிவேலுக்கு காயம் ஏற்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என வடிவேலுக்கு நெருங்கிய ஒருவர் தெரிவித்துள்ளார்.


Advertisement

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மெர்சல். இந்தப் படத்தில விஜய்யுடன் நடனக் காட்சி ஒன்றில் சேர்ந்து ஆடிய போது வடிவேலு சறுக்கி விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து வடிவேலுக்கு நெருங்கிய ஒருவர் கூறும்போது, " படப்பிடிப்பின் போது வடிவேலுக்கு காயம் ஏற்பட்டு அவர் சிகிச்சை பெறுவதாகவும் வதந்தி பரப்புகின்றனர். ஆனால் அதுபோன்ற எந்த காயமும் ஏற்படவில்லை. அவர் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்" என்றார்.

மெர்சல் படத்தின் இரண்டு போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. காஜல் கர்வால், நித்யா மேனன் சமந்தா உள்ளிட்ட நாயகிகள் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அத்தோடு வடிவேலுவும் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனிடையே படத்தின் மூன்றாவது போஸ்டரையும் விரைவில் வெளியிட இயக்குனர் அட்லீ திட்டமிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close