Published : 20,Oct 2020 01:41 PM

லாரி திருடியதால் கைது.. ஜாமீனில் வந்து அதே லாரியை அபேஸ் செய்த திருடன்..!

Daring-Truck-Thief-Steals-Same-Vehicle-From-Police-Station-in-Nagpur

நாக்பூரில் திருடன் ஒருவர் போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை அவர் ஓட்டிச்சென்றார். அந்த லாரி காவல்நிலையத்துக்கு எப்படி வந்தது என்பதில் தான் சுவாரஸ்யம். சஞ்சை தோன் (50) என்பவர் லாரியை திருடிச் சென்றுள்ளார். ரோந்துப்பணியில் இருந்த லகாட்கன் போலீசார் லாரியை மடக்கிப் பிடித்து சஞ்சையை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த லாரியை பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் நிற்கவைத்தனர்.

image

இந்நிலையில் சிறையில் இருந்த சஞ்சை ஜாமீன் பெற்று விடுதலை ஆகியுள்ளார். பின்னர் நேராக காவல்நிலைய வளாகத்திற்கு வந்த அவர் நின்றுகொண்டிருந்த லாரியை மீண்டும் திருடிச்சென்றுவிட்டார்.

காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் உண்மையான உரிமையாளர் லாரியை கவனித்துக்கொள்ள ஒரு ஆளையும் நியமித்துள்ளார். வழக்கு முடியும் வரை காவல்நிலையத்தில் லாரி இருக்க வேண்டுமென்பதால் காத்திருந்துள்ளார். ஆனால் அசந்த நேரத்தில் லாரியை மீண்டும் திருடிக்கொண்டு சென்றுள்ளார் சஞ்சை.

லாரியை காணாததால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தற்போது சஞ்சையை தேடி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்