Published : 08,Jul 2017 09:46 AM

ஆசிரியை தாக்கி 6ம் வகுப்பு மாணவன் படுகாயம்

student-attacked-by-teacher

தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு மாணவன் மாதாந்திர தேர்வு சரியாக எழுத்தாத காரணத்தினால் மாணவனை பெண் ஆசிரியை சரமாரியாக அடித்துள்ளார் - படுகாயமடைந்த மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆரணியை அடுத்த குன்னத்தூர் கிராமத்திலுள்ள தனியார் பள்ளியில் LKG முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் உள்ளன. இந்நிலையில், குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் என்பவரின் மகன் பிரிதீஷ் இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று வகுப்பில் பொது பாடப் பிரிவு மாதாந்திர தேர்வு நடைபெற்றது, இதில் பிரிதீஷ் சரியாக தேர்வு எழுதவில்லை. ஆகையால் வகுப்பு ஆசிரியை பிரேமா மாணவன் பிரிதிஷை சராமரியாக இரும்பு ஸ்கேலில் அடித்துள்ளார். இதனால் மாணவன் கை மற்றும் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டு மிகவும் சோர்வடைந்து காணப்பட்டார்.

இதனையடுத்து, இது சம்மந்தமாக பிரிதீஷ் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தான். உடனடியாக மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் அணுகி கேட்டதற்கு, இந்த பள்ளியில் படிக்கவில்லை என்றால் அப்படித்தான் அடிப்போம் என மிரட்டி பள்ளியை விட்டு வெளியே செல்லுங்கள் என்று கூறி மாணவன் மற்றும் பெற்றோரை வெளியில் விரட்டியடித்துள்ளனர். படுகாயமடைந்த மாணவன் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளி மாணவனை கண் மூடிதனமாக அடித்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்