Published : 18,Oct 2020 06:55 AM

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Rains-parts-of-Tamil-Nadu-over-the-next-two-days

வெப்பச்சலனம் காரணமாக இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு பல இடங்களில் மழை பெய்தது.

image

இந்நிலையில், ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்