Published : 17,Oct 2020 09:15 PM
ஐபிஎல் அரங்கில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய ரபாடா!

நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிஸோ ரபாடா.
27 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள ரபாடா 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறைந்த போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இதற்கு முன்பாக சுனில் நரைன் 32, மலிங்கா 33, இம்ரான் தாஹிர் 35 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
இதில் நடப்பு ஐபிஎல் சீசனில் 9 ஆட்டங்கள் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதன் மூலம் PURPLE கேப் ஹோல்டராகவும் உள்ளார் ரபாடா. அவரது பவுலிங் எக்கானமி 7.47.
அதே போல 89 டாட் பால்களையும் ரபாடா வீசியுள்ளார்.
Make that 50 wickets for @KagisoRabada25 in IPL ⚡️⚡️#Dream11IPLpic.twitter.com/9U7c5GhC9c
— IndianPremierLeague (@IPL) October 17, 2020
அவரது 50வது விக்கெட்டாக வீழ்ந்தவர் சென்னை அணியின் டுப்லெஸி.