கோலி விளாசிய பந்து... எல்லைக் கோட்டில் அசத்தலாக பிடித்த திவாட்டியா - வீடியோ 

கோலி விளாசிய பந்து... எல்லைக் கோட்டில் அசத்தலாக பிடித்த திவாட்டியா - வீடியோ 
கோலி விளாசிய பந்து... எல்லைக் கோட்டில் அசத்தலாக பிடித்த திவாட்டியா - வீடியோ 

துபாயில் நடைபெற்று வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பவுண்டரி லைனில் ஃபீல்டிங் பணியை கவனித்துக் கொண்டிருந்த ராஜஸ்தான் வீரர் ராகுல் திவாட்டியா அற்புதமான கேட்ச் பிடித்து பெங்களூரு கேப்டன் விராட் கோலியை அவுட் செய்தார். 

178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வந்த பெங்களூருவுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக விளையாடி வந்தார் கோலி.

32 பந்துகளில் 43 ரன் குவித்திருந்த நிலையில் இளம் வீரர் தியாகி வீசிய 14வது ஓவரின் முதல் பந்தில் ஃபிளாட் சிக்ஸாக மிட் விக்கெட் திசையில் அடிக்க முயன்றார் கோலி. அதை பவுண்டரி லைனில் ஃபீல்ட் செய்து கொண்டிருந்த திவாட்டியா வேகமாக ஓடி சென்று கேட்ச் பிடித்தார். இருந்தும் அவர் ஓடி வந்த வேகத்திற்கு பவுண்டரி லைனை கிராஸ் செய்ய  வேண்டி இருந்ததால் பந்தை மேல் நோக்கி வீசிவிட்டு பவுண்டரி லைனுக்கு வெளியே சென்று பின்னர் மீண்டும் லைனுக்குள் வந்து கேட்ச் பிடித்தார். 

அந்த அசத்தலான கேட்சினால் கோலி அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். நடப்பு ஐபிஎல் சீசனில் இதேபோல் பல கேட்ச் பிடிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com