Published : 08,Jul 2017 07:00 AM
செல்ல மகளுடன் தோனி: வைரலாகும் புகைப்படங்கள்

36 வது பிறந்தநாளை கொண்டாடிய தோனி அவரது செல்ல மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியின் 36வது பிறந்தநாளை, தோனி மட்டுமில்லாமல் உலகத்தில் அவரது ரசிகர்கள் அனைவரும் நேற்று கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ள இந்திய அணி, தோனியின் பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடியது. பிறந்தநாளை முன்னிட்டு தோனி கேக் வெட்டிய போது, அருகில் இருந்த அவரது செல்ல மகள் ஜிவா மற்றும் அவரது மனைவி சாக்ஷி ரசித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர் இந்திய வீரர்களுடனும், தனது குடும்பத்தினருடனும் தனது 36வது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்களை சாக்ஷி சமூக வலைதளங்களில் பதவிட்டுள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.