[X] Close

தோனியை அப்படி சொல்லாதீங்க: கோலி!

kohli-praises-Dhoni

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய நான்காவது போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதில் தோனி மெதுவாக ஆடியதால் அணி தோல்வியை தழுவியதாகக் கூறப்பட்டது. அவரது ஆமை வேக அரை சதம் கேள்விக்குள்ளானது.
இதுபற்றி கருத்துத் தெரிவித்த இந்திய கேப்டன் கோலி, ‘ டோனி அருமையாக அடித்து ஆடுகிறார். சூழ்நிலைக்கு தகுந்தபடியோ, இன்னிங்சை எப்படி கொண்டு செல்வது என்பது உள்ளிட்ட வி‌ஷயங்கள் குறித்து அவருக்கு சொல்லித்தர வேண்டியதில்லை. அன்றைய போட்டியில் அவரால் அடித்து விளையாட முடியாததற்கு பந்தின் வேகத்தைக் கணிக்க முடியாத வகையில் இருந்ததே காரணம். மற்றபடி அவரது ஆட்டத்தில் குறை இல்லை. அவர் ‘பார்ம்’ பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அவர் சிறப்பாக விளையாடினார். ஒரு ஆட்டத்தை மட்டும் வைத்து ஒருவரை கணிக்கக்கூடாது’ என்று தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close