[X] Close

சிக்கலுக்கு மேல் சிக்கலில் சிம்பு

New-Trouble-for-Actor-Simbu

ஏஏஏ தோல்விக்கு பின் தன் பழைய படமான பாதியில் நின்றுபோன கெட்டவன் படத்தில் நடிக்கலாம் என முடிவு செய்தால் அங்கும் சிம்புக்கு சிக்கல்தான்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். எதிர்பார்த்த அளவு இந்தப் படம் சிம்புவிற்கு வெற்றியை தரவில்லை. இதற்கு மேல் ஒரு படத்தை மோசமாக எடுக்க முடியாது என்கிற அளவிற்கு படம் எடுக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்திருந்தனர்.

இந்நிலையில் தன்னை மீண்டும் ஒரு நல்ல நடிகர் என்பதை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் நடிகர் சிம்பு. இதனால் கடந்த 2007-ஆம் ஆண்டு சிம்புவே இயக்கி பாதியில் நின்றுபோன  கெட்டவன் படத்தை தற்போது வெளியிட்டால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என டி.ராஜேந்தர் சிம்புவிடம் கூறியதாகத் தெரிகிறது.


Advertisement

இதனால் தற்போது கெட்டவன் படத்தை முழுமையாக முடிக்கும் எண்ணத்தில் சிம்பு உள்ளாராம். ஏஏஏ படத்தில் அஸ்வின் தாத்தா கெட்டப்பிற்காக உடல் எடையை ஏற்றிருந்த சிம்பு தற்போது, கெட்டவன் படத்திற்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் நமீதா மற்றும் லேகா வாஷிங்டன் தான் கதாநாயகியாக முன்னர் ஒப்பந்தமாகியிருந்தனர். ஆனால் நமீதா தற்போது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் லாக் ஆகி விட்டார். அவரால் 100 நாட்கள் வெளி உலகிற்கு வர இயலாத சூழ்நிலை சிம்புவுக்கு புதுச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close