Published : 14,Oct 2020 09:55 PM
சீறிய மலைப்பாம்பின் கழுத்தை கச்சிதமாக கவ்விய சிறுத்தை!- திகிலூட்டும் வீடியோ!

சிறுத்தைக்கும் மலைப்பாம்பிற்கும் இடையே நடந்த சண்டையின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேச்சர் இஸ் ஸ்கேரி என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், அமைதியாக சென்றுகொண்டிருக்கும் மலைப்பாம்பை சிறுத்தை மெதுவாக அதன் பின்னால் சென்று அதன் கால்களால் முதலில் தாக்குகிறது. சுதாரித்துக்கொண்ட மலைப்பாம்பு பதிலுக்கு சிறுத்தையுடன் சீறி சண்டையிட முயல்கிறது.
ஆனால், உடனடியாக சிறுத்தை மலைப்பாம்பை வாயில் பிடித்து கடித்து கொன்று அதை சாப்பிட மேலே எடுத்துச் செல்கிறது” பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக காரணம், சிறுத்தையும் மலைப்பாம்பும் வேட்டையாடி உணவை உட்கொள்வைதில் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.
leopard attacks a python! ?? pic.twitter.com/RCqM6SM9Xo
— Nature is Scary (@AmazingScaryVid) October 12, 2020
அதனால்தான், யார் வெல்வார்கள் என்று எதிர்பார்ப்புடன் பார்க்க வைக்கிறது.