[X] Close

‘மைண்ட் கேம் விளையாடி தோனியை நம்பவைத்து அவுட் ஆக்கிய சாஹல் ’ புகழும் சச்சின் 

விளையாட்டு,ஐபிஎல் திருவிழா

Sachin-praises-Chahal-for-taking-Dhoni-s-wicket-through-mind-game

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முக்கியமான தருணத்தில் சென்னை கேப்டன் தோனியின் விக்கெட்டை வீழ்த்தி பெங்களுருவின் வெற்றிக்கு உதவியது சுழற்பந்து வீச்சாளர் சாஹலின் பந்துவீச்சு.

image

இந்நிலையில் சாஹலின் பந்துவீச்சை சதுரங்க ஆட்டத்தோடு ஒப்பிட்டு பேசியுள்ளார் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்.


Advertisement

image

“சாஹல் வீசிய 16வது ஓவரின் மூன்றாவது பந்தை சிக்ஸர் அடித்து மிரட்டியிருப்பார் தோனி. அந்த பந்து மிடில் ஸ்டெம்பை நோக்கி ஃபுள் லெந்த்தாக வீசப்பட்டது.

அதற்கடுத்த இரண்டு பந்துகளையும் லெக் சைடில் வீசினார் சாஹல். 


Advertisement

image

அதனால் கடைசி பந்தும் லெக் சைடில் தான் வரும் என தோனி எதிர்பார்த்திருக்க அந்த பந்தை அவுட் சைட் தி ஆப் ஸ்டெம்ப் திசையில் வீசி மைண்ட் கேம் விளையாடி தோனியை நம்ப வைத்து பெரிய ஷாட் ஆட செய்து அவுட் செய்திருப்பார் சாஹல். என்னை பொறுத்தவரை சாஹல் தோனியுடன் செஸ் விளையாடியது போல தான் இருந்தது” என சொல்லியுள்ளார் சச்சின். 

சாஹல் சதுரங்க ஆட்டத்திலும் ராஜாவாக ஒரு ரவுண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 


Advertisement

Advertisement
[X] Close