[X] Close

அதிகரித்த சினிமா கட்டணம்....ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு?

cinema-ticket-price-after-GST-for-a-family

கணவன், மனைவி, ஒரு குழந்தை உள்ள குடும்பம் சென்னையில் உள்ள ஒரு மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கிற்கு சென்றால் சராசரியாக ரூ. 1,239 வரை செலவாகும். 

ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு முன்பு மல்ட்டிபிளக்ஸ்களில் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.120. ஆனால் தற்போது மல்ட்டிபிளக்ஸ்களில் ஒரு டிக்கெட்டின் விலை 153 ரூபாய். அதையே, நாம் ஆன்லைனில் முன்பதிவு செய்தால், முன்பதிவுக் கட்டணமாக டிக்கெட் ஒன்றுக்கு 30 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். அப்படிப் பார்த்தால், 3 பேருக்கு முன்பதிவுக் கட்டணம் மட்டுமே 90 ரூபாய் ஆகிறது. மல்ட்டிபிளக்சிஸ் திரையரங்குகளில், பாப்கார்ன் ஒன்றுக்கு 180 ரூபாயும் செலவாகிறது. அப்படிப் பார்த்தால், பாப்கார்னுக்கு மட்டும் 3 பேருக்கு 540 ரூபாய் ஆகிறது. மல்ட்டிபிளக்சில் கார் பார்க்கிங்கிற்கு வார விடுமுறை நாட்களில் 3 மணி நேரத்திற்கு 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த வகையில், ஒரு குழந்தையுள்ள குடும்பம் ஒரு திரைப்படத்தைப் பார்க்க சென்றால் சராசரியாக ரூ. 1,239 வரை செலவாகும்.
 

வீடியோ

Related Tags : cinemagstsavetamilcinematamilnadu
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close