[X] Close

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்கிறது ஆர்சிபி !

ஐபிஎல் திருவிழா

RCB-bats-first-in-rival-with-CSK

சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட் செய்கிறது.


Advertisement

ஐபிஎல் தொடரில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை அணியும், கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்ய தீர்மானித்தார்.

image


Advertisement

இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் சென்னை அணி 15 போட்டிகளிலும், பெங்களூர் அணி ‌8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை அணி 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளதால். இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றிப் பெற வேண்டும் என்ற முனைப்புடன் களம் காண்கிறது சிஎஸ்கே.

இந்தப் போட்டியில் கேதர் ஜாதவுக்கு பதிலாக தமிழக வீரர் ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 


Advertisement

 


Advertisement

Advertisement
[X] Close