Published : 07,Jul 2017 05:11 AM
85 கிலோ குறைந்த ஆச்சரிய நடன இயக்குனர்!

தமிழில் ஜீவா, ஸ்ரேயா நடித்த ’ரவுத்திரம்’ படத்தில் நடித்திருப்பவர் கணேஷ் ஆச்சார்யா. இந்தியில் முன்னணி நடன இயக்குனராக இருக்கும் இவர், சில படங்களை அங்கு இயக்கியும் உள்ளார். சிறு வயதில் இருந்தே குண்டாக இருக்கும் கணேஷ் ஆச்சார்யா, இப்போது 200 கிலோ வரை உடல் எடை அதிகரித்தார். இதனால் அவர் நடக்க சிரமப்பட்டார். இதையடுத்து எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இப்போது கடந்த ஒன்றரை வருடத்தில் 85 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். உடல் எடை குறைந்த பிறகு தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கணேஷ் ஆச்சார்யா. இதைக் கண்டு பலர் ஆச்சரியமடைந்துள்ளனர்.
பார்ப்பவர்கள் எல்லோரும் எப்படி எடையை குறைத்தீர்கள் என்றே கேட்கிறார்களாம். ‘ஒன்றரை வருஷம் அரை சாப்பாட்டைச் சாப்பிட்டு, ஜிம்மே கதின்னு கிடந்து, நான் பட்டபாடு இருக்கே...’ என்று நீண்ட பெருமூச்சு விடுகிறார் கணேஷ் ஆச்சார்யா.