[X] Close

தாறுமாறு ஷமி, தடாலடி கோலி: எளிதாக வென்றது இந்தியா

Kohli--spinners-seal-3-1-series-win

முகமது ஷமியின் ஆக்ரோஷமான பந்து வீச்சு மற்றும் கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதாக வென்றது.


Advertisement

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடந்தது. தொடர்ந்து 5வது முறையாக டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட் செய்த அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. 
அந்த அணியின் சகோதரர்கள் ஷாய் ஹோப் 51 ரன்களும், கைல் ஹோப் 46 ரன்களும் கேப்டன் ஹோல்டர் 36 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ‌ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி, 36.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. ரஹானே 39 ரன்கள் எடுத்தார். கோலி, 115 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு தினேஷ் கார்த்திக் (50 ரன்) ஒத்துழைப்புக் கொடுத்தார். கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close