[X] Close

CSK VS KKR : இந்த வீரர்களுக்கு இடையில்தான் இன்றைய ஆட்டமே...!

விளையாட்டு,ஐபிஎல் திருவிழா

CSK-VS-KKR-MATCH-21-PLAYERS-TO-TO-WATCH-OUT

அபுதாபியில் நடப்பு ஐபிஎல் சீஸனின் 21-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன. 


Advertisement

image

தோல்வியிலிருந்து வெற்றி பாதைக்கு திரும்பியுள்ள சென்னை அணி புள்ளிப் பட்டியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் கொல்கத்தா அணியும் இந்த ஆட்டத்தில் வெல்லும் நோக்கத்தோடு  விளையாட உள்ளது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளையும் சேர்ந்த சில வீரர்களுக்கு இடையில் தான் ஆட்டமே உள்ளது. அந்த வீரர்கள் யார்?  


Advertisement

image

ஷேன் வாட்சன் VS பேட் கம்மின்ஸ்

கொல்கத்தாவுக்கு டேஞ்சர் மேனாக பார்க்கப்படுகிறார் ஃபார்முக்கு திரும்பியுள்ள வாட்சன். அவர் களத்தில் நின்று விளையாடினால் பெரிய ஸ்கோரை எடுக்க வாய்ப்புள்ளதால் வாட்சனுக்கு கம்மின்ஸின் பந்து வீச்சின் மூலம் தினேஷ் கார்த்திக் ட்ரபுள் கொடுக்கலாம்.


Advertisement

image

ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிக்கு எதிராக கம்மின்ஸ் சிறப்பாக பந்து வீசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

image

இயன் மோர்கன் VS பியூஷ் சாவ்லா

கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டர் நம்பிக்கையாக பார்க்கப்படும் மோர்கன் சென்னை அணியின் ஸ்பின் டிப்பார்ட்மெண்டை அப்செட் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சுழற்பந்து வீச்சை அபாரமாக விளையாடும் மோர்கன் பியூஷ் சாவ்லாவின் பந்தை துவம்சம் செய்யலாம். 

image

அதே நேரத்தில் அனுபவத்தை கொண்டு சாவ்லாவும் மோர்கனுக்கு நல்ல டஃப் கொடுக்கலாம். 

image

சுப்மன் கில் VS தீபக் சஹார்

கொல்கத்தாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சுப்மன் கில்லுக்கும், சென்னையின் பவுலர் தீபக் சஹாருக்கும் இடையே ஆட்டம் செமையாக இருக்கலாம். இதில் பேட்ஸ்மேன் சுப்மன் கில்லின் கை ஓங்கியுள்ளது. 

image

இவர்கள் மட்டுமல்லாது சென்னைக்காக டூ ப்ளஸிஸ், சாம் கர்ரன், பிராவோ அசத்தலாம்.


Advertisement

Advertisement
[X] Close