பாவனா வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை உறுதி: பினராயி விஜயன்

பாவனா வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை உறுதி: பினராயி விஜயன்
பாவனா வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை உறுதி: பினராயி விஜயன்

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளார்.

நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கடத்தல் சம்பவத்தில் நடிகர் திலீப் அவரது இரண்டாவது மனைவி காவியா மாதவன் ஆகியோருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திலீப் மற்றும் காவியா மாதவன் ஆகியோரும் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாவனா கடத்தில் வழக்கில், விசாரணை சரியான பாதையில் செல்வதாக கூறி இருக்கும் முதலமைச்சர் பினராயி விஜயன், குற்றவாளி எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் காவல்துறையின் வலையில் சிக்குவார் என்றும், அவருக்கு உரிய தண்டனை கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com