தலைமையகத்தில் குவியும் தொண்டர்கள்.. ஈபிஎஸ், ஓபிஎஸ் மீண்டும் தனித்தனியே ஆலோசனை..!

தலைமையகத்தில் குவியும் தொண்டர்கள்.. ஈபிஎஸ், ஓபிஎஸ் மீண்டும் தனித்தனியே ஆலோசனை..!

தலைமையகத்தில் குவியும் தொண்டர்கள்.. ஈபிஎஸ், ஓபிஎஸ் மீண்டும் தனித்தனியே ஆலோசனை..!

அதி

முகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை இன்று காலை 9.30 மணி-10 மணிக்குள் அறிவிக்கவுள்ள  சூழ்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் முதல்வர் ஈபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனிடையே அதிமுக தலைமையகத்தில் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்

அதிமுக முதல்வர் வேட்பாளர் தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் நேற்று தனித்தனியே இரண்டாம் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்துடன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி,டி.பிரபாகர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதே போல, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, காமராஜ் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதன்பிறகு, இரவு 7.45 மணியளவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். சுமார் முக்கால் மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. அதன்பின்னர், 8.30 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இருந்த அமைச்சர்கள் குழுவினர் துணை முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

வழிகாட்டுதல் குழு அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததாகத் தெரிகிறது. இதனால் நள்ளிரவை கடந்தும், அதிகாலை 3 மணி வரை நான்கு முறைக்கு மேலாக, இருதரப்பினருடனான பேச்சுவார்த்தை மாறிமாறி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com