கேரளாவின் திருவனந்தபுரத்தில் இரட்டைச் சகோதரர்களை போக்ஸோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசிக்கும் தம்பதியினர் தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளனர். அவ்வாறு வேலைக்கு செல்லும்போது தங்கள் 10 வயது மகள் மற்றும் 5 வயது மகளை பக்கத்து வீட்டில் வசிக்கும் பெரியப்பாவின் (சிறுமிகளின் தந்தையின் அண்ணன்) வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர். அந்த பெரியப்பாவிற்கு இரட்டை மகன்கள் இருந்துள்ளனர். இளம் வயதினரான இந்த இரட்டைச் சகோதரர்கள் சிறுமிகளின் பெற்றோர் வேலைக்கு சென்ற பின்னர், அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இந்தக் கொடுமை நீண்ட நாட்களாக நடந்திருக்கிறது. சிறுமிகள் களைப்புடனும், சோர்வுடனும் இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த தாய், அவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது இருவருக்கும் நேர்ந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை அன்று சிறுமிகளின் தாயார் திருவல்லம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் சிஹாப் மற்றும் சாய்ஃபுதின் ஆகிய இரட்டைச் சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Loading More post
மெட்ரோவில் திருமண போட்டோஷூட் நடத்த அனுமதி... கட்டண விவரங்கள் அறிவிப்பு
சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம் கானுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது - ராகுல் காந்தி எச்சரிக்கை
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்