Published : 06,Oct 2020 03:04 PM

விற்பனைக்கு வரும் டேவிட் ஹொக்கனே வரைந்த ஓவியம்..!

London-s-Royal-Opera-House-to-sell-Hockney-painting-to-survive-COVID-crisis

லண்டனில் உள்ள ராயல் ஒபேரா ஹவுஸ், 1970-ம் ஆண்டு டேவிட் ஹொக்கனே வரைந்த ஓவியம் ஒன்றை விற்று, நிதி ஈட்ட உள்ளது. கொரோனா பரவலால் ஏற்பட்ட பின்னடைவை சந்திக்க உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹொக்கனே வரைந்த டேவிட் வெப்ஸ்டரின் உருவப்படத்தை, அக்டோபர் 22 அன்று கிறிஸ்டியில் ஏலம் விடவுள்ளதாக அறிவித்து உள்ளனர். அந்த ஓவியத்தின் மதிப்பு 14 முதல் 23 மில்லியன் டாலர் என்று வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

ராயல் ஓபெராவின் முதன்மை செயலாளரான அலெக்ஸ் பியர்ட் கூறுகையில், "வரலாற்றின் மாபெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இது கைகொடுக்கும்" என்கிறார். மேலும் "இதன் மூலம் வரும் வருவாய், உலகின் மிகசிறந்த கலைஞர்களோடு மீண்டும் இணைய உதவும்", என்கிறார்.

imageராயல் ஓபரா ஹவுஸ் போன்று பிரிட்டனின் அனைத்து கலைக்கூடமும் கொரோனா காரணமாக வருவாய் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 80 வயதை கடந்த ஹொக்கனே அவர்கள் வரைந்த  இந்த ஓவியம், 20 மற்றும் 21-ம் நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாக கருதப்படுகிறது.

 ஓவியத்தில் உள்ள வெப்ஸ்டர் 1945 முதல் 1970 வரை இந்நிறுவனத்தை நடத்தியவர். மேலும் இந்நிறுவனத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கத்தோடு  உழைத்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

 இதன் மூலம் வரும் வருவாயினை கொண்டு  கலைஞர்களுக்கு உதவவும், பார்வையாளர்களை கவரும் கலைகளை நடத்த உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்