பிரேசில் கால்பந்து வீரர் ப்ரையன் போர்கஸின் (24 வயது) மனைவி மில்லேனாவுக்கு (26 வயது) கடந்த 1ஆம் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. எனவே ப்ரையன் வீட்டிலிருந்து வெளியே அவரைத் தூக்கி வந்திருக்கிறார்.
லிப்ட்டிற்கு அருகே கொண்டுவந்தபோது லில்லேனாவுக்கு குழந்தை வெளியே வர தொடங்கியதும், அவர் அருகிலிருந்த பெஞ்சில் தன்னை அமரவைக்கும்படி கேட்டுள்ளார். மருத்துவமனைக்குச் செல்ல காரை ஆயத்தப்படுத்திய நிலையில், வீட்டிற்கு வெளியே நடைபாதையிலேயே தனது மகளைப் பெற்றெடுத்தனர் இந்த தம்பதியினர்.
பின்னர் அவரை அங்கிருந்து கொண்டுசெல்ல முடியாத சூழ்நிலையில், ப்ரையனின் இரண்டு நண்பர்களை உதவிக்கு அழைத்தார். போர்வைகளுடன் அங்குவந்த நண்பர்கள், தம்பதியினரை மறைத்துப் பிடித்தனர். ப்ரையனே தனது மனைவிக்கு நடைபாதையில் வைத்து பிரசவம் பார்த்திருக்கிறார். பிறகு மனைவியை அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
தற்போது குழந்தை சிசிலியாவும், தாயும் நலமுடன் உள்ளனர். இதுபற்றிப் பேசிய ப்ரையன், இந்த அனுபவம் வித்தியாசமான இருந்ததாகவும், எதிர்காலத்தில் தனது மகளிடம் அவள் பிறப்பு பற்றி கூறப்போவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
வீட்டிலிருந்து வெளியே வந்ததிலிருந்து குழந்தை பிறந்ததுவரை அனைத்துக் காட்சிகளும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
கால்நடை மருத்துவப் படிப்புகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு.!
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி