Published : 22,Jan 2017 07:41 AM

மக்கள் விரும்பும் போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு.. முதலமைச்சர் பன்னீர்செல்வம்

Alanganallur-Jallikattu-as-per-people-wish--O-Pannerselvam

மக்கள் விரும்பும் போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் நேற்று அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று துவங்கி வைக்க முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை சென்றிருந்தார். ஆனால் அலங்காநல்லூர் மக்கள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வரும் வரை அதனை நடத்த அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இதனால் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைக்காமல் முதலமைச்சர் பன்னீர்செல்வம் சென்னை திரும்ப விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் விரும்பும் போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் என தெரிவித்தார். அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டம் நீடித்த நிலையான சட்டம் என கூறியுள்ள முதலமைச்சர், யாராலும் ஜல்லிக்கட்டை தடுக்க முடியாது என தெரிவித்தார்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றுவருவதாக கூறிய அவர், நாளை கூடும் சட்டப்பேரவையில் அவசரச் சட்டம் சட்டமுன்வடிவாக தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்