மாறிப்போன கொரோனா நோயாளியின் உடல்; அடக்கத்திற்கு பின் அதிர்ச்சியான உறவினர்கள்

மாறிப்போன கொரோனா நோயாளியின் உடல்; அடக்கத்திற்கு பின் அதிர்ச்சியான உறவினர்கள்
மாறிப்போன கொரோனா நோயாளியின் உடல்; அடக்கத்திற்கு பின் அதிர்ச்சியான உறவினர்கள்

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல் தொடர்ந்து மாற்றி கொடுக்கப்படும் அவலம் நாடெங்கும் அரங்கேறிய வண்ணம் உள்ளது.

மருத்துவமனை நிர்வாகத்தின் குளறுபடியாலே இது மாதிரியான சம்பவங்கள் நடக்கின்றன.

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனாவினால் உயிரிழந்த விழிஞ்சம் பகுதியை சேர்ந்த நபரின் உடலுக்கு மாற்றாக அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் உடலை அவரது உறவினர்களிடம் வெள்ளிக்கிழமை அன்று  ஒப்படைத்துள்ளனர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினர். 

விழிஞ்சம் பகுதியை சேர்ந்த நபரின் உறவினர்ளும் அந்த உடலுக்கு இறுதி சடங்குகளை செய்த நிலையில் சனிக்கிழமை அன்று அவருக்கு மாற்றாக அடையாளம் தெரியாத மற்றொருவரின் உடலை கொடுத்ததை அறிந்து கொண்டது மருத்துவமனை.

இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் இருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளது திருவனந்தபுரம் அரசு மருத்துவமனை.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com