Published : 04,Oct 2020 01:26 PM
ஒரு சாலையின் பாடல்: அடல் ரோடங் சுரங்கப்பாதையின் அழகிய புகைப்படங்கள்!

பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த அடல் ரோடங் சுரங்கப்பாதை, உலகின் மிகப்பெரிய பொறியியல் துறை சவாலாகக் கருதப்படுகிறது. பத்து ஆண்டுகால கடும் உழைப்பின் சின்னமாக உருவாகியுள்ள அந்த சுரங்கப்பாதை, இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில் இருந்து லடாக்கின் லே பகுதியை இணைக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரத்து 44 அடி உயரத்தில் 13 மீட்டர் அகலத்தில் அமைந்துள்ள இந்த நெடும்பாதையில் பயணிப்பது வாழ்க்கையில் மறக்கமுடியாத நினைவுகளில் சேகரமாகும் அனுபவமாக இருக்கும்.
பாம்பைப் போல நீண்டு வளையும் அந்த அழகிய சாலையின் பாடலை இந்தப் புகைப்படங்களின் வழியாகக் கேளுங்கள்...
புகைப்படங்கள்: இந்தியாடைம்ஸ் இணையதளம்