Published : 06,Jul 2017 05:16 AM

குழந்தைகள் முன்பு தாய்க்கு பாலியல் வன்கொடுமை: ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்

Mother-raped-in-front-of-children

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பெற்ற குழந்தைகள் முன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் காஜுவாகா பகுதியைச் சேர்ந்த 35 வயது மிக்க பெண் ஒருவர் கடந்த திங்கள் கிழமை வீட்டில் தனது 3 குழந்தைகளுடன் தனியாக இருந்துள்ளார். அப்பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றதை அறிந்து கொண்ட 4 மர்ம நபர்கள் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அந்தப் பெண்ணை குழந்தைகள் முன்னிலையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இதைபற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டிவிட்டு, வீட்டிலிருந்து 500 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

பின்னர், பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை போலீசாரிடம் புகாராகத் தெரிவித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட காஜுவாகா போலீஸார், சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் மற்றும் இந்த குற்றத்திற்கு உதவிய இருவர் என 4 பேரை  கைது செய்துள்ளனர். குழந்தைகள் முன்பே தாய் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது காஜீவாகா பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்