ம.பி: மனைவியை அடித்த வீடியோ வைரல்; ஐபிஎஸ் அதிகாரி இடைநீக்கம்!

ம.பி: மனைவியை அடித்த வீடியோ வைரல்; ஐபிஎஸ் அதிகாரி இடைநீக்கம்!
ம.பி: மனைவியை அடித்த வீடியோ வைரல்; ஐபிஎஸ் அதிகாரி இடைநீக்கம்!

மத்திய பிரதேசம் தலைநகர் போபாலை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி புருஷோத்தம் ஷர்மா. இவர் தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய வீடியோ இணையத்தில் பரவி வைரலானது. இதனால் சிறப்பு டிஐஜி பதவியிலிருந்து அவர் உடனே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவரை இடைநீக்கம் செய்த சிறிது நேரத்திலேயே அவரது மகள், தனது அம்மா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர்தான் எப்போதும் தவறாக நடந்துவருவதாகவும் வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்.

இவர் கொடுத்த வழக்கை விசாரிப்பதற்கு முன்பே, மீண்டும் ஒரு திருப்பமாக, அம்மாநில உள்ளூர் தொலைக்காட்சியில் தொகுப்பாளாராக பணிபுரியும் பெண் ஒருவர் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி, தனது பெயரைக் கெடுத்துவிட்டதாக மற்றொரு வழக்குப்பதிவு செய்துள்ளார்.

அவர் கொடுத்த வழக்கில், செப்டம்பர் 27ஆம் தேதி, மாலை 7 மணியளவில், புருஷோத்தம் ஷர்மா அவருடைய வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பகுதிக்கு தேநீர் அருந்த அழைத்தார். சிறிது நேரம் கழித்து, அதிகாரியின் மனைவி அவரது வீட்டிற்கு வந்து, தகாத வார்த்தைகளால் திட்டி சண்டை போட்டார். இதனால் கோபமடைந்த புருஷோத்தம் அங்கிருந்து சென்றுவிட்டார். பிறகு பல அநாவசியமான கேள்விகளைக் கேட்டதுடன், படுக்கையறைக்குச் சென்று அதை வீடியோ எடுத்து அவருடைய மகனிடம் கொடுத்து சமூக ஊடங்களில் பதிவிட்டதாகவும் அந்த தொகுப்பாளர் புகாரில் கூறியிருக்கிறார். அந்த வீடியோவில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வைத்ததாகவும் அந்தத் தொகுப்பாளர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com