ஒருபுறம் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் மறுபுறம் முதலமைச்சருடன் நத்தம் விஸ்வநாதனும் சந்திப்பு நடத்தியுள்ளனர்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வந்த வண்ணம் இருக்கின்றன. அதன்படி முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என கே.பி.முனுசாமி தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று நடந்த செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் கூட்டத்திலும் மருத்துவர்கள் ஆலோசனைக்கூட்டத்திலும் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டார். ஆனால் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகளும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று மாலை சென்னை கிரீன்வேல்ஸ் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் வேலுமணி திடீரென சந்தித்தார். இதையடுத்து முதலமைச்சருடன் நத்தம் விஸ்வநாதன் சந்தித்து பேசி வருகிறார். இதனிடையே துணை முதல்வர் ஒபிஎஸ்சை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்து பேசி வருகிறார்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்