Published : 05,Jul 2017 12:29 PM

15 மாதங்களுக்குப் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்த கிறிஸ் கெய்ல்

Chris-Gayle-in-team-after-15-months

இந்திய அணிக்கெதிரான டி20 போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் சேர்க்கப்பட்டுள்ளார்.
 
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டி ஆகியவற்றில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டி தொடர் தற்போது நடந்துவரும் நிலையில், சபீனா பார்க் மைதானத்தில் வரும் 9ம் தேதி நடைபெறும் டி20 போட்டிக்கான 13 பேர் கொண்ட அணியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில், அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல்க்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஏப்ரலில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்த கிறிஸ் கெய்ல், கார்லோஸ் பிராத்வெய்ட் தலைமையிலான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்