[X] Close

"நான் தலைவராவதற்கு முன்னாடி யாருனு தெரியும்ல" - கொதித்த கங்குலி !

ஐபிஎல் திருவிழா

Have-played-500-matches-for-India-before-being-appointed-as-a-BCCI-Chief-says-Sourav-Ganguly

நான் பிசிசிஐ தலைவராவதற்கு முன்பு 500 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை விளையாடிய ஒரு வீரர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று ஸ்ரேயாஸ் ஐயர் விவகாரம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

image

டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டார். அவரும், ரிக்கி பாண்டிங்கும் சேர்ந்து டெல்லி அணியை கடந்த சீசனில் சிறப்பாக வழிநடத்தினர். கடந்தாண்டு ப்ளே ஆஃப் சுற்றுவரை முன்னேறியது. அதன் பின் கங்குலி பிசிசிஐ தலைவராக பதவி பெற்றதை அடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார். கடந்தாண்டு முதல் டெல்லி அணியின் கேப்டனாக இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட்டு வருகிறார்.


Advertisement

இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணி தன் முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சந்தித்தது. அந்தப் போட்டியில் கடைசி ஓவரில் சிறப்பாக செயல்பட்டு தோற்க வேண்டிய போட்டியை டை செய்து, சூப்பர் ஓவரில் வென்றது டெல்லி. அப்போது பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் "கேப்டனாக திறமையை வளர்த்துக் கொள்ள ரிக்கி பாண்டிங், சவுரவ் கங்குலி பெரும் உதவியாய் இருந்தார்கள். அவர்கள் இப்போதும் என்னுடன் இருப்பது என் அதிர்ஷ்டம்" என்றார்.

image

இந்த வார்த்தை பெரும் சர்ச்சையானது. பிசிசிஐ தலைவராக உள்ள கங்குலி, டெல்லி கேபிடல்ஸ் எனும் ஒரு ஐபிஎல் அணிக்கு எப்படி ஆலோசனை வழங்கலாம் என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து ட்விட்டரில் விளக்கமளித்த ஸ்ரேயாஸ் ஐயர் " தனிப்பட்ட முறையில் கேப்டனாக என் வளர்ச்சிக்கு பாண்டிங், கங்குலி செய்த உதவி பற்றித்தான் தான் கூறினேன்" என்றார். இதனால் சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள கங்குலி "ஆம் நான் ஸ்ரேயாஸ்க்கு கடந்தாண்டு உதவி செய்தேன். நான் பிசிசிஐ தலைவராக இருக்கலாம். ஆனால் நான் 424 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை விளையாடிய வீரர் என்பதை மறந்துவிட வேண்டாம். அதனால் எந்த இளம் வீரர்களிடம் நான் சென்று பேசுவேன், அவர்களுக்கு உதவி செய்வேன். அது ஸ்ரேயாஸாக இருந்தாலும் சரி விராட் கோலியாக இருந்தாலும் சரி. நான் அவர்களுக்கு உதவுவேன்" என்றார்.

 

 

 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close