கடந்த 2009ம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க படம், தமிழ்ப்பட வரிசையில் சிறந்த படம் மற்றும் திரைக்கதைக்காக தேசிய விருது பெற்றது. இயக்குநர் சசிகுமாரின் பிறந்த நாளில் அவரைப் பற்றி நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்துள்ளார் பாண்டிராஜ். பிறந்த நாள் வாழ்த்துடன், அவர்தான் என் வாழ்க்கையை மாற்றியவர் எனப் பாராட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாண்டிராஜின் பசங்க படத்தைத் தயாரித்தவர் சசிகுமார். தனக்கு அடையாளம் அளித்தவர் என்று கூறியுள்ள பாண்டிராஜ், எனக்கு வேலையளித்தவர், நண்பர் மற்றும் கவனித்துக்கொள்பவரான சசிக்குமார், என் வாழ்க்கையில் எல்லா பாத்திரங்களையும் வகித்துவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் வாழ்க்கையை மாற்றியவர் என்ன சொல்லி அழைப்பீர்கள், உங்கள் கனவுகளை நனவாக்கியவர் யார், உங்களுடைய துன்பமான நேரங்களில் கவலைப்படுவர் யார் என மூன்று கேள்விகளை எழுப்பி சசிகுமாருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளில் சூப்பர்ஹிட் படங்களின் மூலம் சிறந்த இயக்குநராக பாண்டிராஜ் உருவாகியிருக்கிறார். கடைசியாக அவர் இயக்கிய சிவகார்த்திகேயன் நடித்த 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தை இயக்கினார். அடுத்து சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம்.
How do u name a person who has changed ur life?
Who has given life to ur dreams?
Who has cared in ur most painful times?
Employer..,Friend..caretaker..
well-wisher..
Sasikumar sir has done all roles in my life.
Happy birthday @SasikumarDir sir ??#HBDSasikumar #Pasanga pic.twitter.com/Q72uj97d7e — Pandiraj (@pandiraj_dir) September 28, 2020
மண்டலப் பூஜைக்காக திறக்கப்படும் சபரிமலை: கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி !
Loading More post
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
விராலிமலை: விஏஓ வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி - ஒருவர் கைது
பேராவூரணி அருகே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு!
மாயமான பள்ளி மாணவி - காதல் கணவனுடன் மைசூரில் இருந்து மீட்பு
'Chessable Masters' தொடர்: ஒரு தவறான நகர்த்தலால் ஃபைனலில் பிரக்ஞானந்தா தோல்வி!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!