[X] Close

RCB VS MI : டாப் 10 தருணங்கள்

விளையாட்டு,ஐபிஎல் திருவிழா

RCB-VS-MI-TOP-10-MOMENTS-MATCH-10-IPL-2020

துபாயில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வென்றது பெங்களூரு அணி.


Advertisement

image
பரபரப்புக்கு துளி அளவு கூட பஞ்சமில்லாத இந்த ஆட்டத்தின் டாப் 10 தருணங்களை பார்க்கலாம்.

image
1. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் வழக்கம் போல பவுலிங்கை தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில், ஆரோன் பின்சும், தேவ்தத் படிக்கலும் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். பவர் பிளேயில் விக்கெட் ஏதும் இழப்பின்றி 59 ரன்களை குவித்தனர்.


Advertisement

image
2. இந்த சீஸனின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் நிதானமாக விளையாடிய பின்ச், இந்த ஆட்டத்தில் அதிரடியில் மிரட்டினார். 35 பந்துகளில் 52 ரன்களை குவித்திருந்தார் பின்ச். இதில் 7 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். துபாய் மைதானத்தின் பவுண்டரி லைன் பெரிதாக இருந்ததால் ஆகாயத்தில் அடித்து ஆடாமல் கிளாசிக் கிரிக்கெட் டிரைவ்களை ஆடி அவர் அசத்தியிருந்தார்.

image

3. கேப்டன் கோலியின் நம்பிக்கையோடு தொடக்க வீரராக மீண்டும் களமிறங்கிய படிக்கல், நம்பிக்கையை வீணடிக்காமல் ஃபின்சுக்கு கம்பெனி கொடுத்தார்.
5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 40 பந்துகளில் 54 ரன்களை அவர் அடித்திருந்தார்.


Advertisement

image

4. 360 டிகிரி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் இன்றைய ஆட்டத்திலும் சிறப்பாக செய்திருந்தார். முதலில் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறிய வில்லியர்ஸ் ஆட்டத்தின் பிற்பாதியில் மரண காட்டு காட்டியிருந்தார்.
போல்ட், பும்ரா, பட்டின்சன் என அனைத்து பவுலர்களையும் வரிசையாக துவம்சம் விட்டார் டி வில்லியர்ஸ்.
24 பந்துகளில் 55 ரன்களை விளாசினார் ஏபிடி. இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும்.

image

5. போல்ட், பும்ரா, பட்டின்சன் என டி20 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்கள் மும்பை அணியில் ஏராளம். இருந்தாலும் இன்றைய ஆட்டத்தில் ஏனோ மும்பைக்கு அவர்களது பவுலிங் பெரிதும் கைகொடுக்காமல் போய் விட்டது. போல்ட் 4 ஓவர்களில் 2 விக்கெட்டை எடுத்தாலும் 34 ரன்களை கொடுத்தினார், பும்ரா 4 ஓவர்களில் 42 ரன்களையும், பட்டின்சன் 4 ஓவர்களில் 51 ரன்களையும் விக்கெட்டின்றி வாரி வழங்கியிருந்தனர்.

image
6. பெரிய டார்கெட்டை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பெரிய இன்னிங்க்ஸை இன்று ஆடி வெற்றியை தேடி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வெறும் எட்டு ரன்களில் வாஷிங்டனின் சுழலில் அவர் விழுந்தார்.

image

நியூ பாலில் தன்னை பவுல் செய்ய அனுமதித்த கேப்டன் கோலியின் செல்லப்பிள்ளை நான் என நிரூபித்தார் வாஷிங்டன்.
ரோகித் போலவே சஹால் வீசிய சூழலில் டீப் மிட் விக்கெட் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டி காக்.

image
7. பெங்களூருவுக்காக சப்ஸ்டிட்யூட் வீரராக ஃபீல்டிங் செய்ய வந்த பவன் நெகி மூன்று கேட்ச்களை பிடித்து ஆட்டத்தில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார். பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த பவன் நெகி படு பிசியாக செயல்பட்டார்.
ரோகித், டிகாக், ஹர்திக் பாண்டியா என மூன்று பேட்ஸ்மேன்களை விளக்குகளின் ஒளியின் கீழ் கேட்ச் பிடித்து அசத்தியிருந்தார். இந்த ஆட்டத்தில் பொல்லார்டின் கேட்சை பவன் நெகி டிராப் செய்தது குறிப்பிடத்தகுந்த பிழையானது.

image
8. மும்பையுடனான இன்றைய போட்டியில் முதல் ஓவரிலேயே மும்பை கேப்டன் ரோகித் ஷர்மாவை வீழ்த்தி கோலியின் நம்பிக்கையை பெற்ற வாஷிங்டன் சுந்தர், நான்கு ஓவர்கள் வீசி மொத்தமாக 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். ஓவருக்கு வெறும் மூன்று ரன்களை மட்டும் அவர் கொடுத்திருந்தார். இதில் 13 டாட் பால்களும் அடங்கும்.

image
9. மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்ப இஷான் கிஷனும், பொலார்ட்டும் கடைசி வரை வெற்றிக்காக நூறு ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடினர்.

image
இஷான் கிஷன் 58 பந்துகளில் 99 ரன்களை குவித்து அவுட்டானார். இதில் 2 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களும் அடங்கும். அவருக்கு சப்போர்ட் கொடுத்த பொல்லார்ட் 24 பந்துகளில் 60 ரன்களை குவித்திருந்தார்.

image
10. மும்பை இந்தியன்ஸ் அணி சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்தது. பெங்களூருவுக்காக நவ்தீப் ஷைனி பந்து வீச, ஆறு பந்துகளில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 7 ரன்களை மட்டுமே எடுத்தது மும்பை.

image
பெங்களூருவுக்காக கேப்டன் கோலியும், டிவில்லியர்ஸும் களம் இறங்கினர். பும்ரா வீசிய ஓவரில் கடைசி பந்தில் விராட் கோலி விளாசிய பவுண்டரி மூலம் த்ரில் வெற்றி பெற்றது பெங்களூர் அணி.


Advertisement

Advertisement
[X] Close