Published : 05,Jul 2017 11:23 AM

புதுச்சேரி நியமன எம்எல்ஏ-க்கள் விவகாரம்: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

HC-issues-notice-to-central-govt-regarding-Pudhucherry-MLA-issue

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ-க்கள் விவகாரம் தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த மூன்று பேர் நியமன எம்எல்ஏக்களாக பதவிப் பிரமாணம் செய்யப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ-க்கள் தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி அரசு ஒருவாரத்திற்குள் விளக்கமளிக்கவும், சம்பந்தப்பட்ட 3 எம்.எல்.ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் பாஜக நிர்வாகிகள் மூன்று பேரை  நியமன எம்எல்ஏ-க்களாக நியமித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.  நியமனம் செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் அதே கட்சியைச் சேர்ந்த செல்வகணபதி ஆகியோருக்கு, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செவ்வாய்க்கிழமை இரவு ரகசியமாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

நியமன எம்எல்ஏக்களின் பதவிப்பிரமாணம் செல்லாது என முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்தார். இந்நிலையில் அமைச்சரவையை கலந்தாலோசிக்காமல் நியமன உறுப்பினர்களை அறிவிக்கக்கூடாது என காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்