Published : 28,Sep 2020 01:19 PM

பத்து ஆண்டுகளாக வருமான வரி செலுத்தாத டொனால்டு டிரம்ப்

Donald-Trump-paid-no-income-tax-in-10-of-last-15-years

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கடந்த பதினைந்து ஆண்டுகளில் பத்து ஆண்டுகளாக வருமான வரி செலுத்தவில்லை என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் 750 டாலர் மட்டுமே செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

அதாவது, 2018 ஆம் ஆண்டில் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் பிற உரிம ஒப்பந்தங்கள் மூலம் டிரம்ப்புக்கு 427.4 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா காலக் கட்டத்தில் டிரம்பின் சொத்து மதிப்பு 2.1 பில்லியன் டாலரில் இருந்து 1 பில்லியன் டாலராக குறைந்துவிட்டதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்திருந்தது.

image

பல ஆண்டுகளாக வரி தொடர்பான தகவல்கள் பொதுவில் வழங்க மறுத்துவந்த அதிபர் டிரம்ப், வரி செலுத்த மறுத்து சட்டரீதியாக போராடிவந்தார். தன்னுடைய தொழில் நிறுவனங்களில் நஷ்டம் ஏற்பட்டு வந்ததால், அவர் வரிகளைக் குறைக்க முயற்சித்தார் என கூறப்படுகிறது.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்