பயங்கரவாதிகளோடு தொடர்பு... கொல்கத்தாவில் இளைஞர் கைது 

பயங்கரவாதிகளோடு தொடர்பு... கொல்கத்தாவில் இளைஞர் கைது 
பயங்கரவாதிகளோடு தொடர்பு... கொல்கத்தாவில் இளைஞர் கைது 

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஜலங்கி கிராமத்தை சேர்ந்த 25 வயதான இளைஞர் சமீன் அன்சாரியை, பயங்கரவாதிகளோடு தொடர்பில் இருந்தமையால் ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் பிரிவை சேர்ந்த அதிகாரிகள் கடந்த வெள்ளி அன்று கைது செய்துள்ளனர். 

அன்சாரி கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கேரளாவில் பணியாற்றியுள்ளார். அப்போது அங்கு பயங்கரவாத இயக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வந்த நபர்களோடு தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் தேசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளோடு தொடர்பிலிருந்த ஒன்பது பேரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அன்சாரியும் கைது  செய்யப்பட்டுள்ளார். 

நாட்டுக்கு எதிராக சதித் திட்டம் போடுவது மற்றும் ஆயுதங்களை கடத்துவது உள்ளிட்ட காரணத்திற்காக அன்சாரி கைது செய்யப்பட்டுள்ளார்.  

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com