ஐபிஎல்-ல் ஜொலிக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள்..!

ஐபிஎல்-ல் ஜொலிக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள்..!
ஐபிஎல்-ல் ஜொலிக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள்..!

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெற்று வரும் நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்களே இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க இருந்த ஐபிஎல் டி20 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்றுள்ள ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்களும் பெருமளவில் பங்கேற்றுள்ளனர். ஆனால் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு பேட்ஸ்மேன்களை விட இந்திய பேட்ஸ்மேன்களே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

அபுதாபி, துபாய், ஷார்ஜாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் அனைத்து ஆடுகளங்களும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. ஆனாலும் பவுலர்கள் தங்களால் முயன்ற திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சீசனில் இதுவரை பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மட்டுமே சதமடித்துள்ளார். ஆர்சிபிக்கு எதிராக 69 பந்துகளில் 132 ரன்களை விளாசினார். அடுத்தபடியாக பஞ்சாப் அணியின் மயாங்க் அகர்வால் டெல்லிக்கு எதிரான போட்டியில் 89 ரன்களை சேர்த்தார். இவர் இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்குபவர்.

பின்பு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 54 பந்துகளில் 80 ரன்களை குவித்தார். இதற்கடுத்தபடியாக ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 32 பந்துகளில் 74 ரன்களை குவித்து அசத்தினார். இந்தத் தொடரில் முதல் அதிரடியாக சிஎஸ்கேவின் அம்பத்தி ராயுடு மும்பைக்கு எதிரான போட்டியில் 71 ரன்களை எடுத்தார். காயம் காரணமாக அடுத்தடுத்தப் போட்டிகளில் அம்பத்தி ராயுடு பங்கேற்க முடியாமல் போனதால் சிஎஸ்கே அவரின் அதிரடியை மிஸ் செய்து வருகிறது.

நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தாவின் இளம் வீரர் ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடி 70 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரை சிஎஸ்கேவின் டூப்ளசிஸ் மட்டுமே டெல்லிக்கு எதிரான போட்டியில் 72 ரன்களை எடுத்தார், பின்பு ராஜஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் அரைசதம் அடித்தார். இதுவரை ஐபிஎல்லில் இந்திய பேட்ஸ்மேன்களின் கையே ஓங்கியிருக்கிறது. இனி வரும் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்களும் அதிரடியில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com