3 கட்டங்களாக தேர்தல்: பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு

3 கட்டங்களாக தேர்தல்: பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு
3 கட்டங்களாக தேர்தல்: பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு

பீகார் மாநில சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் அக்டோபர் 28-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தேர்தல் தலைமை ஆணையர் சுனில் அரோரா பீகார் மாநில சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் அக்டோபர் 28-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறும் என்றும் அதற்கான முடிவுகள் நவம்பர் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக பேசிய அவர் அரசியல் கட்சிகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும்போது 5 நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும் எனவும் 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் எனவும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர் 16 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர் என்றும் 7.29 கோடி மக்கள் தொகை கொண்ட பீகாரில் 3.84 கோடி வாக்களார்கள் உள்ளனர் என்றார். மேலும் 243 தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றும் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com