பிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு? ஆவலுடன் ரசிகர்கள்

பிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு? ஆவலுடன் ரசிகர்கள்
பிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு? ஆவலுடன் ரசிகர்கள்

இந்திய அளவில் பெரும் ரசிகர்களைக் கொண்டுள்ள டிவி நிகழ்ச்சி பிக்பாஸ். இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் போன்ற பல மொழிகளில் தனியார் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி பல சீஸன்களைக் கடந்து வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது.

அந்த வகையில் தமிழிலும் பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்துவழங்கும் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீஸன் தற்போது வரப்போகிறது. கொரோனா பொதுமுடக்கத்தால் சற்று தாமதமாகத் தொடங்கவுள்ள, இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ பல தொலைக்காட்சிகளிலும் விறுவிறுப்பாக தற்போது ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கிறது.

நெட்டிசன்களுக்கும், மீம் கிரியேட்டர்களுக்கும் விருந்துவைக்கும் வகையில் பிக்பாஸ் தமிழ் சீஸன் 4 - நிகழ்ச்சிக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று மாலை ஆறு மணியளவில் வெளியிடப்போவதாக தனியார் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

யார் யார் இந்தமுறை பங்கேற்கப் போகிறார்கள் என்ற போட்டியாளர்களின் இறுதிப்பட்டியல் இன்னும் வெளிவராத நிலையில், நெட்டிசன்கள் பலர் தங்கள் யூகங்களையும், கருத்துகளையும் வெளியிட்டு வருகின்றனர். இன்று மாலை வெளிவரும் அறிக்கையில் பங்கேற்பாளர்களின் அதிகாரப்பூர்வமான பெயர்ப்பட்டியல் வெளியிடப்படலாம் என எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com