
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மரணமடைந்தார்.
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ்(59). இவர் இந்தியாவில் பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 52 டெஸ்ட் போட்டிகளில் 3,631 ரன்கள் எடுத்துள்ளார். ஜோன்ஸ் 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஏழு சதங்கள் மற்றும் 46 அரைசதங்களின் உதவியுடன் 6068 ரன்கள் எடுத்துள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் விமர்சகராக இருந்து வந்தார்.
இந்நிலையில், கிரிக்கெட் கமெண்ட்ரி பணிக்காக மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.