Published : 24,Sep 2020 11:37 AM

விஜயகாந்திற்கு கொரோனா தொற்றிற்கான சிகிச்சை: மருத்துவமனை அறிக்கை

covid-19-treatment-for-vijayakanth--private-hospital-press-release-

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தனியார் மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

சென்னையிலுள்ள மியாட்  மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவநிலை அறிக்கையில் “ தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று செப்டம்பர் 22 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை சீராக உள்ளது. விஜயகாந்த் முழுமையாக குணமடைந்து விரைவில் வீடுதிரும்புவார் என்று நம்புகிறோம்”  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விஜயகாந்தின் கொரோனா தொற்று சரிசெய்யப்பட்டு விட்டதாக, இன்று காலை வெளியான தேமுதிக தலைமை கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்