ஜம்மு காஷ்மீர்: தொகுதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்: தொகுதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர்: தொகுதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் புட்கம் மாவட்டத்தின் காக் தொகுதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் பூபிந்தர்சிங் நேற்று தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீரின் புட்கம் மாவட்டத்தின் காக் தொகுதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் பூபிந்தர்சிங் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக இரண்டு பாதுகாப்பு காவலர்கள் வழங்கப்பட்டுள்ளனர். நேற்று காக் காவல் நிலையத்தில் பாதுகாப்புப் பணியாளர்களை இருக்க சொல்லிவிட்டு, அருகில் அலூச்சிபாக்கில் தனது மூதாதையர் கிராமத்திலுள்ள வீட்டிற்கு சென்றபோது அங்கு அவர் தீவிரவாதிகளால் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்”என்று காவல்துறை அதிகாரி கூறினார்.

பூபிந்தர்சிங் கொல்லப்பட்டதற்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

"பி.டி.சி கவுன்சிலர் பூபிந்தர்சிங் படுகொலை செய்யப்பட்டதைக் கேட்டு மிகவும் வருந்துகிறேன். மக்களுக்கு சேவை செய்யும் கடைநிலை பணியாளர்கள்தான் தீவிரவாதிகளுக்கு எளிதான இலக்குகளாக உள்ளனர். துரதிர்ஷ்டவசமாக சமீபத்திய ஆண்டுகளில் அவர்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்" என உமர் அப்துல்லா ட்வீட் செய்துள்ளார்.

"பூபிந்தர் சிங் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செய்தியால் ஆழ்ந்த வேதனை அடைகிறோம். காஷ்மீரி ரத்தம் சிந்தப்படாத ஒரு நாள் கூட இருப்பதில்லை. மரணங்கள் நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு நிலையான அங்கமாக மாறிவிட்டன" என்று மக்கள் ஜனநாயக கட்சி ட்வீட் செய்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com