குஜராத்: ஓ.என்.ஜி.சி குழாய் வெடித்து ஆலையில் மிகப்பெரிய தீ விபத்து!

குஜராத்: ஓ.என்.ஜி.சி குழாய் வெடித்து ஆலையில் மிகப்பெரிய தீ விபத்து!
குஜராத்: ஓ.என்.ஜி.சி குழாய் வெடித்து ஆலையில் மிகப்பெரிய தீ விபத்து!

சூரத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி எரிவாயு பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள சூரத் மாவட்டத்தில் ஹசிரா எரிவாயு பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இந்த தீவிபத்தால் யாருக்கும் எந்தவிதமான சேதமும் காயமும் இல்லை என்று ஓ.என்.ஜி.சி தெரிவித்துள்ளது.

சூரத் மாவட்ட ஆட்சியர் தவால் படேல் “எரிவாயு முனையத்திலுள்ள எரிவாயு கொண்டுசெல்லும் குழாய் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு குளிரூட்டப்பட்டது" என்று கூறினார். “ இதன் அருகிலுள்ள மற்ற ஆலைகள் வழக்கம் போல் இயங்குகின்றன. ஓ.என்.ஜி.சி ஆலையும் விரைவில் ஓரளவு செயல்படும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது, "என்று அவர் கூறினார்.

யுரான்-மும்பை 36 அங்குல எரிவாயு குழாயில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக சூரத் நகராட்சி ஆணையர் பஞ்சநிதி பானி தெரிவித்தார். ஹசிரா ஆலை, குஜராத்தின் தெற்கே உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாசீன் எரிவாயு துறையில் இருந்து பெறப்படும் வாயுவை பதப்படுத்துகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com