Published : 23,Sep 2020 03:52 PM

போதைக்காக மருந்தகத்தில் மாத்திரைகளை திருடிய திருடர்கள்: சிக்கியது எப்படி தெரியுமா?

two-accused-arrested-due-to-theft-in-medical-chennai

மருந்தகத்தில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை திருட சென்ற திருடர்கள் உள்ளேயே சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பழைய பல்லாவரம், பாரதி நகரில் சென்னை மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்தகம் வைத்து நடத்தி வருபவர் தமிம் அன்சாரி(28). இவரது கடையில் நள்ளிரவில் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் கடையினுள் புகுந்து போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை திருட முயன்றுள்ளனர். அப்போது மாத்திரைகளை திருடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கடையின் ஷட்டர் தானாக மூடிக் கொண்டது.

image

கிராமத்தினர் குடிக்கும் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலப்பு.! கடலூரில் அதிர்ச்சி

உள்ளே இருந்து வெளியில் வர முடியாமல் தவித்த இரண்டு திருடர்களும் செய்வதறியாது திகைத்தனர். எவ்வளவு முயற்சித்தும் ஷட்டரை திருடர்களால் திறக்க முடியாமல் போனது. சத்தம் கேட்டு கடை இருக்கும் இடத்தின் உரிமையாளர் வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பகுதி மக்கள் உதவியோடு வெளியில் பூட்டை போட்டு திருடர்களுக்கு சிறை வைத்தனர்.

image

இது குறித்து மருந்தக உரிமையாளருக்கும், பல்லாவரம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்து கடைக்குள் இருந்த திருடர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் திரிசூலத்தை சேர்ந்த வெங்கடேஷ்ராஜா(20), மற்றும் கார்த்திக்(19), என்பது தெரியவந்தது. இருவர் மீதும் வழிப்பறி, திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் மருந்தகத்தில் அதிக பணம் கொடுத்து அவ்வப்போது போதைக்காக மருத்துவரின் பரிந்துரை ரசீது இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கியதாகவும், தற்போது பணம் இல்லாததால் மாத்திரைகளையும், பணத்தையும் திருட வந்த போது ஷட்டர் மூடிக் கொண்டதால் சிக்கிக் கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்