Published : 23,Sep 2020 12:31 PM

மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறதா?: லோகேஷ் கனகராஜ் பதில்

Master-movie-is-not-to-be-released-on-OTT--lokesh-kanagaraj

மாஸ்டர் திரைப்படம் ஒடிடியில் வெளியாக வாய்ப்பில்லை என திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.  

 image

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது “ மாஸ்டர் திரைப்படம் திரையரங்களில் தான் வெளிவரும். திரையரங்குள் திறந்த பின்னர் திரைப்படம் வெளியாகும் தேதியை தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும். கொரோனா தொற்றினால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் அதனை நம்பியுள்ளவர்வர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளை திறக்கவில்லை எனில் பலரும் கஷ்டப்படுவார்கள். விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என நம்புகிறேன்” என்றார்.