Published : 04,Jul 2017 11:29 AM

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் தொடர்பு: சென்னையில் ஒருவர் கைது

Person-arrested-in-Chennai-for-being-in-link-with-ISIS


ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு நிதி உதவி மற்றும் ஆட்களை சேர்த்த வழக்கு தொடர்பாக, சென்னையில் ஒருவரை ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

ஐஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு நிதி திரட்டியது மற்றும் ஆட்களை சேர்த்தது உள்ளிட்டவை தொடர்பான வழக்கை ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் மயிலாப்பூரைச் சேர்ந்த முகமது இக்பால் என்பவரை ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சென்னை வந்து கைது செய்து, அவரை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னை பர்மா பஜாரில் செல்போன் கடை வைத்திருக்கும் ஹாரூண் என்ற மற்றொருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று நள்ளிரவு சென்னை வந்த ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், பாரிமுனையில் வைத்து ஹாரூணை கைது செய்தனர். தற்போது ரகசிய இடத்தில் வைத்து ஹாரூணிடம் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்