[X] Close

ஆண் குழந்தையா என அறிய கர்ப்பிணியின் வயிற்றைகிழித்த சம்பவம்: உபி சம்பவத்தில் மேலும் சோகம்.!

இந்தியா

Woman-attacked-by-husband-to-find-fetus-gender-loses-male-child

வயிற்றில் உள்ள குழந்தை என்ன பாலினம் என கண்டுபிடிப்பதற்காக மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர சம்பவம் உத்தர பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்பு அரங்கேறியது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

உத்தர பிரதேசத்தின் நெக்பூர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்தது. ஏற்கெனவே 5 பெண் குழந்தைகளுக்கு தந்தையான பன்னலால் என்பவர், ஆறாவதாக தனக்கு ஆண் குழந்தை வேண்டுமென்று நினைத்துள்ளார். மனைவியும் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா என தெரிந்துகொள்வதற்காக மனைவியின் வயிற்றை கிழித்தார்

image


Advertisement

(பன்னலால்)

கூர்மையான ஆயுதத்தால் கிழித்ததில் 35 வயதான மனைவி கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த குழந்தை ஆண் குழந்தை தான் எனவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். படுகாயம் அடைந்த கர்ப்பிணி இன்னமும் தீவிர சிகிச்சைப்பிரிவில் தான் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close