Published : 21,Sep 2020 08:38 PM
அதிரடி அரைசதம்... பெங்களூரு அணியின் புதிய இளம் ரத்தம் ’படிக்கல்’

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு அதிரடி தொடக்கத்தை கொடுத்துள்ளார் இளம் பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல்.
கோலி படையில் புதிய படைவீரனாக இணைந்துள்ள படிக்கல் இன்று தனது முதல் ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடி வருகிறார்.
A steady start for the @RCBTweets in their first outing in #Dream11IPL.
— IndianPremierLeague (@IPL) September 21, 2020
After 5 overs, the scoreboard reads 48/0 https://t.co/iJSJnKDLto#SRHvRCBpic.twitter.com/xMNMZL8sQe
கர்நாடக பிரிமியர் லீக் தொடரில் அதிரடியாக விளையாடிய இடது கை பேட்ஸ்மேனான படிக்கல் அதன் மூலம் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார்.
‘நான் இரண்டாவதாக கருவுற்றிருந்த போதே பிறப்பது ஆண் பிள்ளையாக இருந்தால் அவனை கிரிக்கெட் பிளேயராக ஆளாக்க வேண்டும் என விரும்பினேன்’ என சொலிக்கிறார் படிக்கல்லின் அம்மா அம்பில் படிக்கல்.
அதே போல தன் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக கிரிக்கெட் பிளேயராக வளர்த்திருக்கிறார் படிக்கல்.
‘அவன் 2019 சீசனில் ஆடியிருந்தால் அவனது முதல் போட்டியை நேரில் பார்த்திருப்பேன். இம்முறை கொரோனாவினால் அதை பார்க்க முடியாமல் போனது’ என வருத்தமாக சொல்கிறார் அம்பில்.
‘படிக்கலின் ஆட்டத்தை பார்ப்பவர்கள் அசந்து நிற்பார்கள்’ என்கிறார் அவரது கோச் முகமது நஸீருதீன்.
அட்டாக்கிங் பேட்ஸ்ட்மேனான படிக்கல் கடந்த 2017ல் நடைபெற்ற கேபிஎல் தொடரில் 53 பந்துகளில் 72 ரன்களை குவித்துள்ளார். அதோடு உள்ளூர் கிரிக்கெட்டிலும் கர்நாடக அணிக்காக விளையாடி வருகிறார் படிக்கல்.
இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனர் பின்ச்சோடு பெங்களூருவுக்காக ஓப்பனிங் ஆடி 42 பந்துகளில் 56 ரன்களை குவித்து விஜய் ஷங்கரின் பந்தில் போல்டானார்.
How's that for a maiden IPL FIFTY!
— IndianPremierLeague (@IPL) September 21, 2020
Devdutt Padikkal brings up his half-century off 36 deliveries.
Live - https://t.co/iJSJnKDLto#Dream11IPL#SRHvRCBpic.twitter.com/smZDH0acDe
ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன்னதாக கடந்த 2016இல் முதல் போட்டியில் அரை சதம் அடித்திருந்தார் சாம் பில்லிங்ஸ். இந்தியா சார்பில் உள்நாட்டு வீரர்கள் கடந்த 2010இல் கேதார் ஜாதவ் அரை சதம் அடித்திருந்தார். ஆர்.சி.பி அணிக்காக இதற்கு முன்னதாக கடந்த 2008இல் ஸ்ரீவத் கோஸ்வாமி அரை சதம் அடித்திருந்தார்.